என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    ஈரோட்டில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

    ஈரோட்டில் மின்விசிறியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு:

    ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பூம்புகார் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 22). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி மஞ்சுளா (20). செந்தில்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் செந்தில்குமார் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து, மனைவி மற்றும் மாமியாரை வெளியே அனுப்பி விட்டு உள்புறமாக பூட்டிக்கொண்டார். வெகுநேரம் ஆகியும் அவர் கதவை திறக்காததால் அவருடைய மனைவி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது செந்தில்குமார் மின்விசிறியில் தூக்குப்போட்டு உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார்.

    உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே செந்தில்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×