என் மலர்

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கும்மிடிப்பூண்டி அருகே லாரி-மோட்டார் சைக்கிள் மோதி விபத்து - வாலிபர் பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கும்மிடிப்பூண்டி அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்
    கும்மிடிப்பூண்டி:

    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த ஆலாடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெகன் (வயது 20). இவர் ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டியில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்தார். வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து தொழிற்சாலைக்கு மோட்டார் சைக்கிளில் ஜெகன் சென்று கொண்டிருந்தார். கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையான பாலகிருஷ்ணபுரம் மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தபோது, அங்கு நின்று கொண்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஜெகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×