என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    கீரனூர், மாத்தூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

    கீரனூர், மாத்தூர் பகுதிகளில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் காலை 9 மணி முதல் மாலை 4.45 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
    கீரனூர்:

    கீரனூர் உபகோட்டத்திற்கு உட்பட்ட குளத்தூர் (அம்மாசத்திரம்) துணை மின் நிலையத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக கீரனூர், குளத்தூர், இளையாவயல், பிரகதாம்பாள்புரம், சத்தியமங்கலம், முத்துக்காடு, திருமலைராயபுரம், உப்பிலியக்குடி, நார்த்தாமலை ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4.45 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என கீரனூர் உதவி செயற்பொறியாளர் முத்துக்கருப்பன் தெரிவித்துள்ளார்.

    இதேபோல, மாத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் மாத்தூர், குமாரமங்கலம், ஆவூர், ஆம்பூர்பட்டி, புதுப்பட்டி, நால்ரோடு, செங்களாக்குடி, குண்டூர், பர்மாகாலனி, குளவாய்பட்டி, துறைக்குடி, முள்ளிப்பட்டி, திருமலைசமுத்திரம், வங்காரம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4.45 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×