என் மலர்
செய்திகள்

விபத்து பலி
தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதல்: தூக்கி வீசப்பட்ட வாலிபர் கிணற்றில் விழுந்து பலி
மத்தூர் அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டம் சின்னகசிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 19). இவர், தனது நண்பர் சுரேஷ் (19) என்பவருடன் வேலம்பட்டியில் நடைபெற்ற எருதுவிடும் திருவிழாவை காண வந்தார். பின்னர் அவர்கள் 2 பேரும் வீடு திரும்பினர். கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே மூக்காகவுண்டனூர் பகுதியில் சென்றபோது சாலையோரம் இருந்த ஒரு கிணற்றின் தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் அருண்குமார் கிணற்றில் தூக்கி வீசுப்பட்டு தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போச்சம்பள்ளி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து அருண்குமாரின் உடலை மீட்டனர். தடுப்புச்சுவரில் மோதியதில் சுரேஷ் படுகாயம் அடைந்தார். அவர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story






