என் மலர்

  செய்திகள்

  விபத்து பலி
  X
  விபத்து பலி

  வாகனம் மோதி வாலிபர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வாகனம் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  ராயக்கோட்டை:

  கெலமங்கலம் அண்ணா நகரை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 29). மருந்து கடையில் ஊழியராக வேலை செய்து வந்தார். நேற்று இரவு வேலை முடிந்து அவர் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். மஞ்சளகிரி என்ற இடத்தில் சென்ற போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத ஒரு வாகனம், மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த நவீன்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து ராயக்கோட்டை இன்ஸ்பெக்டர் கமலேசன், கெலமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த நவீன்குமாருக்கு அஸ்வினி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
  Next Story
  ×