என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
மரணம்
முத்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி பலி
By
மாலை மலர்30 Jan 2021 2:16 PM GMT (Updated: 30 Jan 2021 2:16 PM GMT)

முத்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முத்தூர்:
முத்தூர் அருகே உள்ள வேலம்பாளையம் ஊராட்சி வயலூரை சேர்ந்த கருப்பணகவுண்டரின் மனைவி கோவிந்தம்மாள் (வயது 77). இவரை நேற்று முன்தினம் மாலை முதல் காணவில்லை. இதையடுத்து அவரை, அவருடைய குடும்பத்தினர், உறவினர்கள் தேடினர். ஆனாலும் அவரை கண்டு பிடிக்கமுடியவில்லை. இந்த நிலையில் நேற்றுகாலை ஊரின் அருகில் உள்ள கிணற்றில் கோவிந்தம்மாள் பிணமாக மிதந்தார். இதுகுறித்து வெள்ளகோவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசாரும், வெள்ளகோவில் தீயணைப்பு நிலைய வீரர்களும் விரைந்து வந்து மூதாட்டி கோவிந்தம்மாளின் உடலை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், கிணற்றுக்குள் தவறி விழுந்து கோவிந்தம்மாள் இறந்து இருப்பது தெரியவந்தது.
Next Story
×