என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
கைது
ஊட்டிக்கு சென்று திரும்பியவரை அரிவாளால் வெட்டி வழிப்பறி- 3 பேர் கைது
By
மாலை மலர்30 Jan 2021 11:30 AM GMT (Updated: 30 Jan 2021 11:30 AM GMT)

பாபநாசம் அருகே ஊட்டிக்கு சென்று திரும்பியவரை அரிவாளால் வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பாபநாசம்:
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள திருப்பாலைத்துறை பகுதியை சேர்ந்தவர் மூவேந்திரன்(வயது48). இவர் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று திரும்பியர். சம்பவத்தன்று மூவேந்திரன் ஊட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு அதிகாலை பாபநாசத்துக்கு வந்தார். அதிகாலை 3 மணியளவில் திருப்பாலத்துறை பஸ் நிறுத்தத்தில் இறங்கி தனது வீட்டுக்கு மூவேந்திரன் நடந்து சென்றார்.
அப்போது அந்த வழியாக 3 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் மூவேந்திரனை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு, அவரிடம் இருந்த ரூ.1500-ஐ பறித்து சென்று விட்டனர்.
அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த மூவேந்திரன் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து மூவேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்களையும் தேடி வந்தனர். இந்தநிலையில் பாபநாசம் புதிய பஸ் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த 3 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தாராசுரத்தை சேர்ந்த இன்பசெல்வன்(வயது 21), ரஞ்சித்குமார்(23), திருச்சி எடமலைப்பட்டி புதூரை சேர்ந்த பிரபு(21) என்றும் அவர்கள் மூவேந்திரனை அரிவாளால் வெட்டி வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து பாபநாசம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட்டு சிவகுமார் 3 வாலிபர்களையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். பின்னர் 3 பேரும் கும்பகோணம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
Next Story
×