search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேயிலை
    X
    தேயிலை

    ஊட்டி, குன்னூரில் கடும் உறைபனி- தேயிலை மகசூல் பாதிப்பு

    ஊட்டி மற்றும் குன்னூரில் கடும் உறைபனி நிலவுவதால் தேயிலை மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் கவலையடைந்துள்ளனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே உறை பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. குறிப்பாக ஊட்டி, குன்னூர், கேத்தி பள்ளத்தாக்கு, குந்தா உள்ளிட்ட பகுதிகளில் கடும் உறைபனி நிலவுவதால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள். அங்குள்ள மக்கள் அதிகாலை நேரங்களில் வெளியில் வர முடியாமலும், தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்கு செல்வோர் பணிக்கு செல்ல முடியாமலும் வீட்டிற்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    வீடுகளில் குடிப்பதற்காக குடங்களில் வைத்திருக்கும் தண்ணீர் கூட கடும் உறைபனியால் உறைந்து போய் காணப்படுகிறது.

    இதுதவிர தேயிலை தோட்டங்கள், விளை நிலங்கள், புல் வெளிகள் போன்றவை மீது உறைபனி வெள்ளைக்கம்பளம் விரித்தது போல் காணப்படுகிறது. உறைபனியுடன் சேர்ந்து குளிர் காற்றும் வீசுவதால் கடும் குளிர் நிலவுகிறது.

    உறைபனி மற்றும் கடும் குளிரால் பொதுமக்களும், ஊட்டிக்கு சுற்றுலா வந்த பயணிகளும் மிகுந்த அவதிக்குள்ளாயுள்ளனர். சுற்றுலா பயணிகள் வெளியில் வர முடியாமல் விடுதிகளிலேயே முடங்கியுள்ளனர்.

    மாவட்டத்தில் நடப்பாண்டு, வழக்கத்திற்கு மாறாக, கடந்த டிசம்பர் மாதம் முழுவதும் மழை பெய்தது. இதனால் பனிப்பொழிவு குறைந்து, தேயிலை தோட்டங்களில் அரும்புகள் துளிர்விட்டு, பசுந்தேயிலை மகசூல் அதிகரித்தது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவும், பகல் நேரங்களில் வெயிலும் சுட்டெரிப்பதால் தேயிலை செடிகளில் கொப்புள நோய் தாக்கம் அதிகரித்து மகசூல் பாதிப்படைந்துள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் கவலையடைந்துள்ளனர்.

    குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகளவில் மேரக்காய் செடிகள் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளன. தற்போது நிலவி வரும் கடும் உறைபனி காரணமாக மேரக்காய் செடிகளும், அதில் உள்ள காய்கள் அனைத்தும் கருகி விட்டன.

    Next Story
    ×