search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் புகையிலை பொருட்கள் விற்பனை: 177 பேர் மீது வழக்குப்பதிவு

    தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசால் தடைசெய்யப்பட்ட புகைபொருட்கள் விற்பனை செய்த 117 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தே‌‌ஷ்முக் சேகர் சஞ்சய்க்கு தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. அதன் படி மாவட்டம் முழுவதும் சோதனை நடத்தும் படி போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி தஞ்சை கிழக்கு போலீசார் 5 இடங்களிலும்,தாலுகா 2 இடங்களிலும், தெற்கு போலீசார் 7 இடங்களிலும், மருத்துவக்கல்லூரி போலீசார் 4 இடங்களிலும், தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் 3 இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

    மேலும் வல்லம் போலீசார் 4 இடங்களிலும், கள்ளப்பெரம்பூர் போலீசார் 4 இடங்களில் சோதனை நடத்தினர். அதில் 29 கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து 29 கடை உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதேபோல் ஒரத்தநாடு, வாட்டாத்திக்கோட்டை, பாப்பாநாடு, திருவோணம் ஆகிய போலீசார் 17 இடங்களில் சோதனை செய்தனர். பட்டுக்கோட்டை போலீசார் 35 இடங்களிலும், திருவையாறு போலீசார் 26 இடங்களிலும், தஞ்சை புறநகர் பகுதியில் 26 இடங்களிலும், கும்பகோணம் போலீசார் 27 இடங்களிலும், திருவிடைமருதூர் போலீசார் 17 இடங்களில் என மொத்தம் 148 இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

    இதில் அந்த கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து அந்தந்த சரக போலீசார் 148 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மாவட்டம் முழுவதும் மொத்தம் 177 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தொடர்ந்து சோதனை நடைபெறும் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

    Next Story
    ×