என் மலர்

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தஞ்சாவூர் அருகே லாட்டரி சீட்டு விற்பனை: வாலிபர் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தஞ்சாவூர் அருகே லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை கீழவாசல் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக மேற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகம் படும் வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் பாலோபாநந்தவனம் பகுதியை சேர்ந்த தியாகராஜா (வயது36) என்பதும், விற்பனைக்காக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து தஞ்சை மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தியாகராஜாவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×