என் மலர்
செய்திகள்

விபத்து
கோத்தகிரி அருகே கார் மோதி தொழிலாளி பலி
கோத்தகிரி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
கோத்தகிரி:
கோத்தகிரி அருகே வள்ளுவர் காலனியை சேர்ந்தவர் ரவிராஜா(வயது 46). தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகன் உள்ளனர். இந்த நிலையில் நேற்று மதியம் 1 மணியளவில் ரவிராஜா தனது மோட்டார் சைக்கிளில் கோத்தகிரி-குன்னூர் சாலையில் சென்று கொண்டு இருந்தார். அய்யப்பன் கோவில் மண்டபம் அருகில் எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட ரவிராஜா படுகாயம் அடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே ரவிராஜா பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரை ஓட்டி வந்த ஈரோடு மாவட்டம் நசியனூரை சேர்ந்த லோகேஸ்வரன்(29) என்பவரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story