என் மலர்

  செய்திகள்

  விபத்து பலி
  X
  விபத்து பலி

  வந்தவாசி அருகே பைக் விபத்தில் மாமியார்- மருமகள் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வந்தவாசி அருகே பைக் விபத்தில் மாமியார்- மருமகள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  வந்தவாசி:

  வந்தவாசி அடுத்த சாத்தனூரை சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி சின்ன குழந்தை (76) முத்துவின் தம்பி மகன் பன்னீர்செல்வம், இவரது மனைவி பச்சையம்மாள் (45), சின்ன குழந்தைக்கும் பச்சையம்மாளுக்கும் உடல் நிலை சரியில்லை. இருவரையும் சின்ன குழந்தையின் மகன் சங்கர் (40) பைக்கில் வந்தவாசி தனியார் மருத்துவமனைக்கு நேற்று இரவு அழைத்து வந்தார்.

  சிகிச்சைக்கு பின்னர் சின்னகுழந்தையையும், பச்சையம்மாளையும் பைக்கில் ஏற்றிக்கொண்டு சங்கர் சாத்தனூர் நோக்கி சென்றார்.

  வந்தவாசி விளாங்காடு நெடுஞ்சாலை சளுக்கை கூட்டு சாலை அருகே பைக் சென்றபோது பின்னால் அதிவேகமாக வந்த கீழ்ப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த விறகு வெட்டும் தொழிலாளி பாக்யராஜ் (24) ஓட்டி வந்த பைக் சங்கர் பைக் மீது மோதியது இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

  படுகாயமடைந்த 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

  அங்கு சிகிச்சை பலனின்றி சின்ன குழந்தை பரிதாபமாக இறந்தார். மேல் சிகிச்சைக்காக பச்சையம்மாள், சங்கர் இருவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

  அங்கு சிகிச்சை பலனின்றி பச்சையம்மாள் நள்ளிரவு பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக வந்தவாசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×