என் மலர்

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    சோமரசம்பேட்டையில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சோமரசம்பேட்டையில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சோமரசம்பேட்டை:

    திருச்சி சோமரசம்பேட்டை வாசன் சிட்டி 16-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் காசிவிசுவநாதன். இவருடைய மனைவி உமா மகேஸ்வரி(வயது 56). இவர் கடந்த 18-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு கேரளாவில் உள்ள தனது மகனை பார்க்க சென்றுவிட்டார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், வீட்டிற்குள் சென்று பார்த்த போது, பூஜை அறையில் இருந்த வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.25 ஆயிரம் திருட்டு போயிருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×