என் மலர்
செய்திகள்

கைது
லாட்டரி சீட்டுகள் விற்ற 3 பேர் கைது
லாட்டரி சீட்டுகள் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:
கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகுராம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கரூர் மக்கள் பாதை அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்றதாக கரூர் வளையல்கார தெருவை சேர்ந்த சந்திரசேகரன் (வயது 50), கரூர் மாரியம்மன் கோவில் அருகே லாட்டரி சீட்டுகள் விற்று கொண்டிருந்த ராமச்சந்திரன் (45) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் பசுபதிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார் பசுபதி பாளையத்துக்குட்பட்ட பல்வேறு இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது லாட்டரி சீட்டுகளை விற்றதாக முகமது ரபிக் (50) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story