search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகூர் பெருமாள் தெற்கு வீதியில் பாதாள சாக்கடை கழிவு நீர் சாலையில் தேங்கி நிற்பதை படத்தில் காணலாம்.
    X
    நாகூர் பெருமாள் தெற்கு வீதியில் பாதாள சாக்கடை கழிவு நீர் சாலையில் தேங்கி நிற்பதை படத்தில் காணலாம்.

    சாலையில் தேங்கி நிற்கும் பாதாள சாக்கடை கழிவுநீர்- தொற்று நோய் பரவும் அபாயம்

    நாகூர் பெருமாள் தெற்கு வீதியில் சாலையில் தேங்கி நிற்கும் பாதாள சாக்கடை கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.
    நாகூர்:

    நாகையை அடுத்த நாகூரில் பெருமாள் தெற்கு வீதி உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த தெரு வழியாக எம்.ஜி.ஆர். நகர், தும்பபூ மடத்தெரு, பெருமாள் வடக்கு வீதி, மாப்பிள்ளை தெரு, புதிய பஸ் நிலையம் ஆகிய தெருக்களுக்கு செல்லும் முக்கிய சாலையாக உள்ளது.

    இந்த நிலையில் பெருமாள் தெற்கு வீதியில் பாதாள சாக்கடையில் இருந்து கழிவு நீர் வெளியேறி சாலையில் தேங்கி நிற்கிறது. கடந்த 10 நாட்களாக பாதாள சாக்கடை கழிவு நீர் சாலையில் தேங்கி நிற்கிறது. மேலும் கழிவுநீரும், மழைநீரும் கலந்து தேங்கி கிடப்பதால் துர்நாற்றம் வீசிவருகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மூக்கை பிடித்து கொண்டு செல்கின்றனர்.

    கழிவுநீரில் கொசுகள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல், சிக்குன்குனியா உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த பகுதியில் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பெருமாள் தெற்கு வீதியில் சாலையில் தேங்கி கிடக்கும் பாதாள சாக்கடை கழிவு நீரை அகற்ற வேண்டும். மேலும் மீண்டும் சாலையில் கழிவு நீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் எதி்ர்பார்த்துள்ளனர்.
    Next Story
    ×