search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    காஞ்சீபுரம் அருகே வாலிபர் கொலை வழக்கில் தாய், மகள் உள்பட 4 பேர் கைது

    காஞ்சீபுரம் அருகே கள்ளக்காதல் விவகாரம் தொடர்பான வாலிபர் கொலை வழக்கில் தாய், மகள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தை அடுத்த களக்காட்டூர் காந்தி தெருவை சேர்ந்தவர் அருள். இவரது மகன் லிங்கமூர்த்தி (வயது32). சமையல்காரராகவும், நிலத்தரகராகவும் வேலை செய்து வந்தார்.

    கடந்த 11-ந்தேதி இரவு இவரை சில நபர்கள் கத்தியால் வெட்டியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு 12-ந் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா உத்தரவின் பேரில், காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமேகலை மேற்பார்வையில் காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தார்.

    விசாரணையில், காஞ்சீபுரம் ஆலடி தோப்பு தெரு இந்திரா நகரை சேர்ந்தவர் அம்சா (40). இவரது 2-வது கணவர் பெருமாள். இவர் அம்சாவை பிரிந்து சென்றதால் தனது 2 மகள்களுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் அம்சாவுக்கும் லிங்கமூர்த்திக்கும் பழக்கம் ஏற்பட்டு கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தனர்.

    அம்சாவின் முதலாவது மகள் ஐஸ்வர்யம் (21) , திருப்பருத்திக்குன்றத்தை சேர்ந்த ஹரிஹரன் என்கிற ஹரிஸ் 19 என்பவரை காதலித்து வந்தார்..

    ஹரிகரனை சந்தேகத்தின் பேரில் மாகரல் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தென்னரசு பிடித்து விசாரணை செய்தார்.

    விசாரணையில் லிங்கமூர்த்தி அடிக்கடி அம்சா வீட்டுக்கு வருவது ஹரிஹரனுக்கு பிடிக்கவில்லை என்பதும் அதனால் 2 முறை கைகலப்பு ஏற்பட்டதும் தெரியவந்தது.

    அம்சா வீட்டுக்கு ஹரிஹரன் வரக்கூடாது என்று லிங்கமூர்த்தி மது குடித்துவிட்டு தகராறு செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து அம்சா, அவரது மகள் ஐஸ்வர்யம் ஆகியோர் ஹரிஹரனுகக்கு தகவல் தெரிவித்தனர். ஹரிகரன் தனது நண்பரான குருவிமலை கிராமத்தை சேர்ந்த நேதாஜி (20) என்பவருடன் சேர்ந்து லிங்க மூர்த்தியை வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரிஹரன், நேதாஜி, அம்சா அவரது மகள் ஐஸ்வர்யம் ஆகியோரை கைது செய்து காஞ்சீபுரம் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்கள் குடியாத்தம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    Next Story
    ×