search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மல்லிகை பூ
    X
    மல்லிகை பூ

    மதுரையில் மல்லிகை கிலோ ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனை

    பொங்கல் பண்டிகையையொட்டி பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை இருமடங்கு அதிகரித்துள்ளது. மல்லிகை கிலோ ரூ.3 ஆயிரத்தை எட்டியுள்ளது.
    மதுரை:

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் நாளை கொண்டாடப்படுகிறது. வீடுகளில் பொங்கல் வைத்து மலர் அலங்காரம் செய்து வழிபடுவது வழக்கம். இதனால் மக்கள் பூக்களை அதிகளவில் விரும்பி வாங்குவார்கள்.

    இதன் காரணமாக மதுரையில் உள்ள பூ மார்க்கெட்டில் நேற்று முதல் மக்கள் கூட்டம் அலைமோதியது. வீடுகளுக்கு தேவையான பூக்கடை பொதுமக்கள் வாங்கினர்.

    மழைக்காலமாக இருப்பதால் போக்குவரத்து குறைந்துள்ளது இதனால் விலையும் அதிகரித்துள்ளன.

    மதுரை மார்க்கெட்டில் கடந்த வாரம் மல்லிகை பூ கிலோ 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. தற்போது மல்லிகை 3 ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது.

    அதுபோல முல்லை பூக்கள் 2 ஆயிரம் ரூபாய்க்கும், பிச்சி ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அரளி 400 ரூபாய்க்கும், கனகாம்பரம் 2 ஆயிரம் ரூபாய்க்கும் விலை அதிகரித்துள்ளன. சம்மங்கி 300 ரூபாய்க்கும், கொழுந்து 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

    இது தொடர்பாக மார்க்கெட் சங்கத் தலைவர் பூக்கடை ராமச்சந்திரன் கூறுகையில், தற்போது மழை காலமாக இருப்பதால் மார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து அதிகமாக இல்லை வழக்கமாக ஜனவரி மாதத்தில் அதிக அளவில் பூக்கள் வருவது வழக்கம்.

    ஆனால் தற்போது மழை நீடித்து வருவதால் பூக்கள் வரத்து தடைபட்டுள்ளது. விலையும் அதிகரித்துள்ளது. இதே நிலை நீடித்தால் பூக்களின் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது என்றார்.
    Next Story
    ×