search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாத்தனூர் அணை
    X
    சாத்தனூர் அணை

    தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு- சாத்தனூர் அணைக்கு 3,500 கனஅடி நீர்வரத்து

    தொடர் மழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாத்தனூர் அணைக்கு 3,500 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 104 அடியாக உயர்ந்துள்ளது.
    தண்டராம்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகிலுள்ள சாத்தனூர் அணை 119 அடி உயரம் கொண்டதாகும். அணையின் மூலம் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இதேபோல் ஏரிகள் நீர் ஆதாரங்களை பெற்று வருகின்றன. இந்த அணையின் நீரை கொண்டு கூட்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    செங்கம் பகுதிகளில் நேற்று முன்தினம் 11.20 மில்லி மீட்டர் மழை பெய்தது. இதனால் சாத்தனூர் அணையின் வழியாகச் செல்லும் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு 3,541 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது

    நீர்வரத்து காரணமாக சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 104 அடியாக உயர்ந்துள்ளது. 4 ஆயிரத்து 355 மில்லியன் கன அடி நீர் அணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இதே அளவு நீர் வரத்து இருந்தால் சாத்தனூர் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதேபோல் 60 அடி உயரம் கொண்ட குப்பநத்தம் அணையில் 45.90 அடியும், 22.97 அடி உயரமுள்ள மிருகண்டா அணையில் 4.59 அடியும், 62.32 அடி உயரமுள்ள செண்பகத்தோப்பு அணையில் 58.02 அடியும் தண்ணீர் உள்ளது.
    Next Story
    ×