என் மலர்

  செய்திகள்

  விபத்து பலி
  X
  விபத்து பலி

  சரக்கு வாகனம் மோதியதில் ஆட்டோவில் சென்ற பெண் பலி- டிரைவர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சரக்கு வாகனம் மோதியதில் ஆட்டோவில் சென்ற பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  பேரூர்:

  கோவையை அடுத்த காளம்பாளையம், ஜி.ஜி.டி., நகரை சேர்ந்தவர் முரளி (வயது 57). இவர் தனது மனைவி கீதாவுடன் (45) பேரூரில் இருந்து காளம்பாளையம் நோக்கி சிறுவாணி ரோடு பச்சாபாளையம் பிரிவு அருகே பயணிகள் ஆட்டோவில் நேற்று காலை சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வேகமாக வந்த சரக்கு வாகனம் ஆட்டோவை உரசியபடி சென்றது.

  இதில், ஆட்டோவில் தலையை வெளியே நீட்டியபடி உட்கார்ந்திருந்த கீதாவின் தலை 2 ஆக உடைந்தது. இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில், பேரூர் போலீசார் விரைந்து வந்து கீதாவின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, அதிவேகமாக சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த தீத்திபாளையத்தை சேர்ந்த டிரைவர் கிஷோர்குமார் (29) என்பவரை கைது செய்தனர்.
  Next Story
  ×