என் மலர்

  செய்திகள்

  காங்கிரஸ்
  X
  காங்கிரஸ்

  தமிழக காங்கிரஸ் செயற்குழு சென்னையில் 10-ந் தேதி கூடுகிறது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாளை காலை 10 மணிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி தலைமையில் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் மாவட்ட அளவில் காங்கிரஸ் தேர்தலை சந்திக்கும் வியூகம் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

  சென்னை:

  சட்டசபை தேர்தலை சந்திக்க தமிழ்நாடு காங்கிரஸ் தயராகி வருகிறது.

  இந்தநிலையில் நாளை காலை சென்னை சத்திய மூர்த்தி பவனில் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது. மாநில தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடக்கிறது.

  நாளை மறுநாள் மாநில செயற்குழு கூட்டம் நடக்கிறது. மாலையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம் நடக்கிறது.

  இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

  மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் தலைவர் கூட்டம் ஆகியவற்றை நடத்த வேண்டும் என்று நானும், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவும், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு பரிந்துரை செய்து இருந்தோம்.

  அவரது ஒப்புதலின் படி, இந்த கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது நடைபெறும் தேதி அதில் பங்கேற்போர் விவரம் வருமாறு:-

  நாளை காலை 10 மணிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலை மையில் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் மாவட்ட அளவில் காங்கிரஸ் தேர்தலை சந்திக்கும் வியூகம் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

  நாளை மாலை தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமையில் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடக்கிறது. இதில் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் பங்கேற்கிறார்கள்.

  10-ந் தேதி காலை மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது. இதில் நிர்வாகிகள் தேர்தலில் எவ்வாறு பணி புரிய வேண்டும் என்பது குறித்து கருத்துக்கள் அறியப்பட்டு, ஆலோசனை வழங்கப்படுகிறது.

  மாலையில் மூத்த நிர்வாகி பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் தமிழ் நாடு காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம் நடக்கிறது. இதில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

  இந்த கூட்டங்களில் தமிழக காங்கிரசின் அகில இந்திய பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், எம்.எல்.ஏ.க்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் பங்கேற்கிறார்கள்.

  இதில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், ராகுல் காந்தியின் தமிழக தேர்தல் சுற்றுப்பயணத்தை சிறப்பாக நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. எனவே, அழைப்பு கடிதம் பெற்றவர்கள் அனைவரும் தவறாமல் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  Next Story
  ×