என் மலர்
செய்திகள்

X
கைது
தண்டவாளத்தில் மொபட்டை விட்டுச்சென்ற மாட்டு வியாபாரி கைது
By
மாலை மலர்8 Jan 2021 10:04 AM IST (Updated: 8 Jan 2021 10:04 AM IST)

தண்டவாளத்தில் மொபட்டை விட்டுச்சென்ற மாட்டு வியாபாரியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மொரப்பூர்:
போச்சம்பள்ளி அருகே உள்ள வாலிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மேகநாதன் (வயது 31). மாட்டு வியாபாரி. சம்பவத்தன்று சாமல்பட்டி அருகே மோட்டார்சைக்கிளில் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது மோட்டார்சைக்கிள் தண்டவாளத்தில் சிக்கிக்கொண்டதால் அவரால் வண்டியை எடுக்க முடியவில்லை. அந்த நேரத்தில் சேலத்திலிருந்து சென்னை நோக்கி சரக்கு ரெயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. இதனை அறிந்த அவர் மோட்டார்சைக்கிளை தண்டவாளத்தில் விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை நடத்தி மேகநாதனை கைது செய்தனர்.
Next Story
×
X