என் மலர்

    செய்திகள்

    அமைச்சர் காமராஜ்
    X
    அமைச்சர் காமராஜ்

    அமைச்சர் காமராஜூக்கு கொரோனா அறிகுறி இல்லை - தனியார் மருத்துவமனை அறிக்கை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜுக்கு கொரோனா அறிகுறி இல்லை எனமியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 5-ந்தேதி சென்னை ராமாபுரத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

    இந்நிலையில், அவருக்கு எடுக்கப்பட்டுள்ள சி.டி. ஸ்கேன் பரிசோதனையில் கொரோனா அறிகுறி இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

    இதுதொடர்பாக, மியாட் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் பிரித்வி மோகன்தாஸ் வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

    அமைச்சர் ஆர்.காமராஜூக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு மியாட் ஆஸ்பத்திரியில் 5-ந்தேதி அனுமதிக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். அவரது சி.டி. ஸ்கேன் இயல்பான நிலையில் உள்ளது. அவருக்கு தொற்றுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. சாதாரணமாக ஒரு அறை காற்றில் கிடைக்கப்பெறும் ஆக்சிஜன் அளவே அவருக்கு போதுமானதாக இருக்கிறது.

    வேறு எந்தவிதமான கூடுதல் ஆக்சிஜன் துணையும் தேவைப்படவில்லை. அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என தெரிவித்துள்ளது.
    Next Story
    ×