search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    திருப்பதி கோவிலுக்கு ஏராளமானோர் சென்று திரும்புவதால் தமிழக-ஆந்திர எல்லையில் கொரோனா பரிசோதனை

    ஆந்திராவில் இருந்து வேலூருக்கு வாகனங்களில் வரும் பொதுமக்களை மடக்கி கொரோனா பரிசோதனையை சுகாதாரத்துறை குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

    வேலூர்:

    உருமாறிய கொரோனா இந்தியாவிலும் பரவ தொடங்கிவிட்டது. இதனால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை தெரிவிதுள்ளது.

    தமிழக- ஆந்திர எல்லையான காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடி பகுதியில் வேலூர் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் கொரோனா பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு வருகிறது. ஆந்திராவில் இருந்து வேலூருக்கு வாகனங்களில் வரும் பொதுமக்களை மடக்கி கொரோனா பரிசோதனையை சுகாதாரத்துறை குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியிருப்பதாவது:-

    வேலூர் மாவட்டத்திற்கு அருகில் ஆந்திரா மாநிலம் உள்ளது. வர்த்தக ரீதியாகவும், திருப்பதி, காளஹஸ்தி, கானிப்பாக்கம் போன்ற கோவில்களுக்கும் வேலூர் மாவட்ட மக்கள் உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமானோர் அதிகளவில் சென்று வருகின்றனர்.

    அப்படி சென்று வரும்போது கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    இதில் பைக்கில் வருபவர்களுக்கு கட்டாயமாகவும், கார்களில் வரும் சிலருக்கும் பிசோதனை செய்து வருகிறோம். அதேபோல் அடிக்கடி மருத்துவமனை சிகிச்சைக்கும், மார்க்கெட்டிற்கும் வந்து செல்பவர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.

    இதன்மூலம் மாவட்டத்தில் முழுமையாக கொரோனா கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.

    இதேபோல் பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக வாகனங்களில் மருந்து தெளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×