என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வேலூரில் மோட்டார் சைக்கிள்-ஸ்கூட்டர் மோதி விபத்து - ரேஷன் கடை முன்னாள் ஊழியர் பலி

    வேலூரில் மோட்டார் சைக்கிள் ஸ்கூட்டர் மீது மோதிய விபத்தில் ரேஷன் கடை முன்னாள் ஊழியர் உயிரிழந்தார்.
    வேலூர்:

    வேலூர் தொரப்பாடி அவ்வைநகரை சேர்ந்தவர் கணேசன் (வயது 65), ரேஷன் கடையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் நேற்று காலை ஸ்கூட்டரில் வேலூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். சாய்நாதபுரம் அன்பு இல்லம் அருகே வந்தபோது எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் திடீரென கணேசன் ஓட்டிவந்த ஸ்கூட்டர் மீது மோதியது.

    இந்த விபத்தில் கணேசன் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களும் படுகாயம் அடைந்தனர். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து அவர் வரும் வழியில் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். 2 வாலிபர்களுக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் படுகாயமடைந்தவர்கள் வேலப்பாடியை சேர்ந்த தாமோதரன் (25), கண்ணன் (25) என்பது தெரியவந்தது.
    Next Story
    ×