என் மலர்
செய்திகள்

மரணம்
வில்லியனூர் அருகே குடிபோதையில் வாய்க்காலில் தவறி விழுந்து தொழிலாளி பலி
வில்லியனூர் அருகே குடிபோதையில் வாய்க்காலில் தவறி விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வில்லியனூர்:
வில்லியனூர் அருகே உள்ள அம்மணகுப்பத்தை சேர்ந்தவர் அப்பாதுரை (வயது 53). அதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.
நேற்று மாலை அப்பாதுரை குடிபோதையில் பத்துக்கண்ணு அருகே உள்ள வாய்க்காலுக்கு சென்றார். அப்போது அவர் திடீரென்று தவறி வாய்க்கால் தண்ணீரில் விழுந்து மூழ்கி, பரிதாபமாக இறந்துபோனார்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் வில்லியனூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து வாய்க்காலில் மூழ்கிய அப்பாதுரையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Next Story






