என் மலர்
செய்திகள்

பா.ம.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டகாட்சி
வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி பா.ம.க.வினர் போராட்டம்
சேலம் அருகே வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி பா.ம.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம்:
சேலம் மாநகர் சூரமங்கலம் மண்டல அலுவலகம் முன்பு வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி பா.ம.க. சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு சேலம் வடக்கு மாவட்ட செயலாளர் ஏ.ஆர்.பி. சாம்ராஜ் தலைமை தாங்கினார். பசுமை தாயகத்தின் மாநில இணைச்செயலாளர் சத்ரிய சேகர், மாநில துணைச்செயலாளர் ஆனந்தராஜன், மாவட்ட சிறப்பு செயலாளர் சேகர், பா.ம.க. மாநில செயற்குழு உறுப்பினர் சிவா, மாநில மகளிர் சங்க செயலாளர் மாதவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக பழைய சூரமங்கலம் பகுதியில் இருந்து ஏராளமான பா.ம.க.வினர் ஊர்வலமாக புறப்பட்டு சூரமங்கல மண்டல அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழக அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இந்த போராட்டத்தில் சூரமங்கலம் கிழக்கு பகுதி செயலாளர் சிவகுமார், தெற்கு பகுதி செயலாளர் தில்லை ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் வசந்த், கோபால், சுப்பிரமணியம், சரவணன், சீனிவாசன், கிருஷ்ணம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story