என் மலர்

  செய்திகள்

  பிரேமலதா விஜயகாந்த்
  X
  பிரேமலதா விஜயகாந்த்

  தே.மு.தி.க. இடம் பெறும் கூட்டணியே வெற்றி பெறும்- பிரேமலதா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. எங்கு இருக்கிறதோ அந்த கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
  போரூர்:

  சென்னை மேற்கு மாவட்டம் மதுரவாயல் பகுதி தே.மு.தி.க. சார்பில் கிறிஸ்துமஸ் விழா மதுரவாயல் மின்வாரிய அலுவலகம் அருகில் இன்று நடைபெற்றது.

  இதில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு ஏழை- எளிய மக்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கினார்.

  அப்போது பிரேமலதா பேசும்போது, அனைவருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் வைகுண்ட ஏகாதசி வாழ்த்துக்கள். வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில்தே.மு.தி.க. எங்கு இருக்கிறதோ அந்த கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்” என்றார்.

  இந்த நிகழ்ச்சியில் மாநில துணை செயலாளர்கள் எல்.கே.சுதிஷ், பார்த்தசாரதி, மாவட்ட செயலாளர் போரூர் தினகர், பகுதி செயலாளர் சதிஷ்காந்த், வட்ட செயலாளர்கள் மகேஷ்குமார், குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  முன்னதாக சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளில் தொண்டர்கள் புடைசூழ காரில் புறப்பட்ட பிரேமலதா விஜயகாந்த்துக்கு மதுரவாயல் வரை வழி நெடுகிலும் கட்சியினர் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
  Next Story
  ×