என் மலர்
செய்திகள்

திருவள்ளுர் மாவட்டம்
திருவள்ளுர் மாவட்டத்தில் புதிதாக 64 நேரடி நெல் கொள்முதல் நிலையம்- கலெக்டர் தகவல்
திருவள்ளுர் மாவட்டத்தில் ஒரு பிர்காவிற்கு ஒரு நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடங்குவதற்கு ஏதுவாக முதற்கட்டமாக 64 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர்:
திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில், வேளாண்மைத்துறை சார்பில், விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. கலெக்டர் பொன்னையா தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

தற்போது கடம்பத்தூர், எல்லாபுரம் மற்றும் பூண்டி ஆகிய வட்டாரங்களில் அறுவடை முடியும் தருவாயில் உள்ளதால் உடனடியாக 20 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 31.12.2020க்குள்ளும் மீதமுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 10.01.2021-க்குள் தொடங்கப்படும்.
விவசாயிகள் தாங்கள் பயிர் செய்துள்ள பரப்பு, எதிர்பார்ப்பு கொள்முதல் அளவு குறிப்பிட்டு முன்னதாக அடையாள எண் பெற்று அதன்படி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்யலாம்.
மேலும் விவசாயிகளிடையே ஒரு குழு அமைத்து வெளி வியாபாரிகள் உள்ளே வராமல் கண்காணித்து நேரடி நெல் கொள்முதல் நிலையம் நல்லமுறையில் செயல்பட ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மூன்று போகமும் பயிர் சாகுபடி செய்யும் இடங்களில் ரூ.35 இலட்சம் மதிப்பீட்டில் நிரந்தரமாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைப்பதற்கு ஆவண செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, வேளாண்மை இணை இயக்குநர் சம்பத் குமார், வேளாண்மை துணை இயக்குநரும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளருமான எபிநேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story