
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகில் உள்ள ஊராளிபட்டியில் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் அக்கட்சியின் நிறுவனத்தலைவர் அர்ஜூன்சம்பத் அளித்த பேட்டியில் கூறியதாவது,
சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் இந்துமக்கள் கட்சி போட்டியிடும். ரஜினியின் ஆன்மீக அரசியல் தமிழகத்தில் நிச்சயமாக வெற்றிபெறும். பா.ஜ.க உள்ளிட்ட யாருடைய முகமூடியாகவோ, பி டீமாகவோ ரஜினி செயல்படமாட்டார். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் பல்வேறு கோவில்களில் இன்னும் கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் உள்ளது.
எனவே அதுபோன்ற கோவில்களை கணக்கெடுத்து கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய எஸ்றா சற்குணத்தை உடனடியாக கைது செய்யவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.