என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    வந்தவாசியில் கஞ்சா பயன்படுத்திய 5 பேர் கைது

    வந்தவாசியில் கஞ்சா பயன்படுத்திய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வந்தவாசி:

    வந்தவாசி துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கராமன் உத்தரவின்பேரில் வந்தவாசி தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், சப்-இ்ன்ஸ்பெக்டர் மஞ்சுநாத் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு எதிரே உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடம் அருகே சென்றபோது விற்பனைக்கூட வளாகத்தில் இருந்து 5 பேர் ஓடினர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை மடக்கிபிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், கே.எஸ்.கே. நகரை சேர்ந்த சாதிக் பாட்சா மகன் அஜ்மீர் (வயது 20), குப்தீன் மகன் பாருக் (38), பாபு பாஷா மகன் அப்துல் அமீது (25), பினாங்கு காதர்ஷா தெருவைச் சேர்ந்த பாபு மகன் முகம்மது அலி (24), கோட்டை தெருவைச்சேர்ந்த யாகூப் அலி (58) என்பது தெரிந்தது. மேலும் அவர்கள் கஞ்சா பயன்படுத்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

    அதைத்தொடர்ந்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×