என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
அன்னவாசல் அருகே புகையிலை பொருட்கள் விற்ற 13 பேர் மீது வழக்குப்பதிவு
அன்னவாசல் அருகே புகையிலை பொருட்கள் விற்ற 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அன்னவாசல்:
இலுப்பூரில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றதாக பெட்டிக்கடை உரிமையாளர் திருநாவுக்கரசு (வயது 35), முத்துக்கருப்பன் (42) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் அன்னவாசல் கீழக்குறிச்சி பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற பாலசிங்கம் (35), அங்கப்பன் (45) மற்றும் வெள்ளனூரில் விற்ற பழனிச்சாமி (48), இந்திரா (46), செல்வம் (40), கருப்பையா (36), அழகர்சாமி (42) ஆகியோர் மீதும் அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதேபோல் ெநடுவாசல், மாங்காடு, வடகாடு பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற, யோகநாதன் (58), திருமுருகன் (33), கணேசன் (46), நேரு (46) ஆகியோர் மீது வடகாடுபோலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Next Story






