என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழையால் சேறும், சகதியுமான சாலை
    X
    மழையால் சேறும், சகதியுமான சாலை

    போளூரில் பெய்த தொடர் மழையால் சேறும், சகதியுமான சாலை- பொதுமக்கள் அவதி

    போளூரில் பெய்த தொடர் மழையால் சாலையில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
    போளூர்:

    போளூரில் பெய்த தொடர் மழையால் வி.ஆர்.எஸ்.நகர், சாஸ்தா நகர் ஆகிய பகுதியில் உள்ள சாலையில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக சேறும், சகதியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×