என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    போளூரில் ஜேப்படி செய்த 2 பெண்கள் கைது

    போளூரில் பஸ்சுக்கு காத்திருந்தவரிடம் ஜேப்படி செய்த 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
    போளூர்:

    போளூர் மாட்டுப்பட்டி தெருவில் வசிப்பவர் பழனி. இவர், திருவண்ணாமலைக்கு செல்ல பஸ் நிலையத்தில் பயணிகள் தங்கும் கூடத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அங்கு 2 பெண்கள் செல்போனில் பேசியபடி சுற்றி வந்தனர். அப்போது 2 பெண்களில் ஒருவர் திடீரென பழனி பாக்கெட்டில் இருந்து ரூ.2 ஆயிரத்தை எடுத்தார். இதனால் சுதாரித்துக்கொண்ட பழனி அவரை பிடித்து கொண்டார். பின்னர் அந்த பெண், பணத்தை அவருடன் சுற்றித்திரிந்த பெண்ணிடம் கொடுத்தார். உடனே அந்த பெண் பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து ஓடினார்.

    இதனால் பழனி கூச்சலிட்டார். அந்த பகுதியில் இருந்தவர்கள், அந்த பெண்ணை துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் 2 பேரையும் போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் குப்பத்தை சேர்ந்த சாந்தி (வயது 42), நிர்மலா (35) என்பது தெரிந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.
    Next Story
    ×