என் மலர்
செய்திகள்

கைது
காஞ்சீபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு- 3 பேர் கைது
காஞ்சீபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
படப்பை:
காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வாரணவாசி கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வடமலை (வயது 30). இவர் தனது குடும்பத்துடன் தென்னேரிக்கு சென்றுள்ளார். பின்பு வீடு திரும்பியதும் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பீரோவை திறந்து லாக்கரை பார்த்த போது, அதில் இருந்த 2½ பவுன் நகை வெள்ளி கால் கொலுசு ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்செ சென்றது தெரிய வந்தது. இது சம்பந்தமாக ஆகாஷ், (வயது 18), சீரஞ்சீவி (19), அஜித் (21) ஆகிய 3 பேரை போலீசார் பிடித்து கைது செய்தனர்.
Next Story






