என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    பண்ருட்டி அருகே கார் மோதி தொழிலாளி பலி

    பண்ருட்டி அருகே சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி அடுத்த மாளிகைமேடு அரசமர தெருவை சேர்ந்தவர் பழனி (வயது 45), தொழிலாளி. இவர் பண்ருட்டியில் உள்ள மளிகை கடையில் வேலை செய்து வந்தார். இவருக்கு வாசுகி என்கிற மனைவியும், கிஷோர்(13) புகழ்(10) என்ற 2 குழந்தைகளும் உள்ளனர். 

    இந்த நிலையில் பழனி நேற்று காலை வேலைக்கு செல்வதற்காக பண்ருட்டிக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கடலூர் விழுப்புரம்- மாளிகைமேடு சாலை புளியந்தோப்பு அருகில் வந்தபோது, எதிரே வந்த கார் ஒன்று அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பழனி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 

    இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×