என் மலர்

    செய்திகள்

    சேலம் லைன்மேடு ஆயுதப்படை மைதானத்தில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு நடந்த போது எடுத்த படம்.
    X
    சேலம் லைன்மேடு ஆயுதப்படை மைதானத்தில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு நடந்த போது எடுத்த படம்.

    சேலத்தில் ஊர்க்காவல் படைக்கு 52 பேர் தேர்வு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சேலம் லைன்மேட்டில் உள்ள மாநகர ஆயுதப்படை மைதானத்தில் ஊர்க்காவல் படைக்கு 52 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
    சேலம்:

    சேலம் லைன்மேட்டில் உள்ள மாநகர ஆயுதப்படை மைதானத்தில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு முகாம் நேற்று நடைபெற்றது. இதற்கு ஏரியா கமாண்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். போலீஸ் துணை கமிஷனர்கள் சந்திரசேகரன், செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஊர்க்காவல் படை என்பது வேலை அல்ல. அது ஒரு சேவை பணியாகும். இதில் தேர்வு பெற்றவர்கள் போலீசாருக்கான அனைத்து கட்டுப்பாடுகளையும் பின்பற்ற வேண்டும். ஊர்க்காவல் படையினருக்கு தவறான பழக்கங்கள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களுடன் பழக்கம் இருக்கக்கூடாது.

    ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே சேவை செய்ய அழைக்கப்படுவார்கள். அவர்களுக்கு அதற்கான சீருடையும் வழங்கப்படும். எனவே சமுதாயத்திற்கு பயனுள்ள வகைகளில் பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த முகாமில் 140 பேர் கலந்து கொண்டனர். இதில் 3 பெண்கள் உள்பட மொத்தம் 52 பேர் தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு ஓட்டப்பந்தயம், உயரம் உள்ளிட்ட உடற்தகுதி தேர்வுகள் நடைபெற்றது. இதில் உதவி கமிஷனர் எட்டியப்பன், துணை ஏரியா கமாண்டர் ஷிபா ரொனால்டு மற்றும் போலீஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×