என் மலர்

  செய்திகள்

  நிரம்பி வழியும் மதுராந்தகம் ஏரி
  X
  நிரம்பி வழியும் மதுராந்தகம் ஏரி

  நிரம்பி வழியும் மதுராந்தகம் ஏரி- பொதுமக்கள் செல்ல தடை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மதுராந்தகம் ஏரி நிரம்பி வழிவதால் பொதுமக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு பொதுப்பணித்துறையினரும் வருவாய்த்துறையினரும் தண்டோரா மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்.
  மதுராந்தகம்:

  செங்கல்பட்டு மாவட்டத்தின் மிக பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஏரி 23.3 அடி உயரம் கொண்டது. 696 மில்லியன் கனஅடி கொள்ளளவை கொண்ட இந்த ஏரி 2 ஆயிரத்து 411 ஏக்கர் பரப்பளவு உடையது. ஏரியில் 110 தானியங்கி கதவுகள் உள்ளன. ஏரியில் வினாடிக்கு 237 அடி கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அந்த தண்ணீர் அப்படியே உபரி நீராக வெளியேற்றப்படுகிறது.

  மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏரி நிரம்பி வழிவதாலும், மேலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாலும் கிளியாற்று கரையோரம் உள்ள கிராமங்களான கத்திரி சேரி. விழுதமங்கலம், முள்ளி, முன்னூத்தி குப்பம், வளர்பிறை, வீராணம், குன்னம்,தச்சூர், குன்னத்தூர், தோட்டநாவல், மேட்டு காலனி, கே.கே. புதூர், பூண்டி நகர், ஈசூர், மலைப்பாளையம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்ளை சேர்ந்த கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  பொதுப்பணித்துறையினரும் வருவாய்த்துறையினரும் தண்டோரா மூலம் பொதுமக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.

  மேலும் ஏரிக்கரையில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

  இதுகுறித்து பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் குமார் கூறுகையில்:-

  ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகமாக இருப்பதால் ஏரியை பொதுப்பணித்துறையினர் கண்காணித்து வருகின்றனர். 

  இவ்வாறு அவர் கூறினார்.
  Next Story
  ×