என் மலர்

  செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  கடலூர் அருகே நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த 2 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கடலூர் அருகே நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  கடலூர்:

  கடலூர் அருகே ராமாபுரம் அடுத்த குறிஞ்சிநகர் பகுதியில் 2 பேர் நாட்டுத்துப்பாக்கியுடன் பறவைகளை வேட்டையாட முயற்சிப்பதாக கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். 

  அப்போது அங்கு 2 பேர் நாட்டுத்துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்தனர். இதை பார்த்த போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருமாணிக்குழியை சேர்ந்த நாகப்பன் மகன் ரமேஷ் என்கிற கார்த்தி (வயது 32), சங்கர் மகன் சூர்யா(21) என்பதும், உரிமம் பெற்று வாங்கிய துப்பாக்கியை அவர்கள் கடந்த சில ஆண்டுகளாக உரிமத்தை புதுப்பிக்காமல் பயன்படுத்தியதும், வேட்டையாட முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷ், சூர்யா ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.
  Next Story
  ×