என் மலர்

  செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  கொண்டலாம்பட்டி அருகே ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொண்டலாம்பட்டி அருகே ஏ.டி.எம். மையத்தில் திருட முயன்ற முகமூடி கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
  கொண்டலாம்பட்டி:

  சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள காக்காபாளையம் பிரிவு வேம்படிதாளம் ரோட்டில் தனியார் வங்கி ஏ.டி.எம். மையம் ஒன்று இயங்கி வருகிறது. சம்பவத்தன்று அந்த ஏ.டி.எம். மையத்தில் முகமூடி அணிந்திருந்த 2 மர்ம நபர்கள் நுழைந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த 2 கேமராக்களில் ஒன்றை பேப்பர் போட்டு ஒட்டியும், மற்றொன்றை பபுள் கம் கொண்டு ஒட்டியும் மறைத்தனர். அதன்பிறகு ஏ.டி.எம்.மில் பணத்தை திருட இரும்பு கம்பியால் எந்திரத்தை உடைத்து பார்த்துள்ளனர். இதற்கிடையே அதனை முழுமையாக உடைக்க முடியாமல் மர்ம நபர்கள் திணறினர். அப்போது அந்த மையத்துக்கு பணம் எடுப்பதற்காக சிலர் வந்தனர். இதை பார்த்து அங்கு திருட முயன்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

  இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் கொண்டலாம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்த கேமராவை ஆய்வு செய்து விசாரித்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

  Next Story
  ×