search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓ.பி.எஸ், வானதி சீனிவாசன்
    X
    ஓ.பி.எஸ், வானதி சீனிவாசன்

    வானதி சீனிவாசனுக்கு துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வாழ்த்து

    பா.ஜனதா மகளிர் அணியின் தேசிய தலைவராக நியமிக்கப்பட்ட நிலையில், வானதி சீனிவாசனுக்கு துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    தமிழகத்தைச் சேர்ந்த வானதி சீனிவாசன் இன்று மாலை பா.ஜனதா கட்சியின் மகளிர் அணி தேசியத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

    இதனைத்தொடர்ந்து தமிழக துணைமுதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வானதி சீனிவாசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். துணை முதல்வர் டுவிட்டர் பக்கத்தில் ‘‘பாஜக-வின் தேசிய மகளிர் அணி தலைவராக தமிழகத்திலிருந்து வானதி ஸ்ரீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. 
    அவரது பணி மென்மேலும் சிறந்தோங்கிட எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×