என் மலர்
செய்திகள்

மழை வெள்ளத்தில் வாகனங்கள் தத்தளித்தபடி சென்றதை படத்தில் காணலாம்.
திருப்பூரில் கன மழை- சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்
திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று கன மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. காலையில் முதல் மாலை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியை சந்தித்து வந்தனர்.
வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் இளநீர், சர்பத் உள்ளிட்ட குளிர்பானங்களின் விற்பனையும் மும்முரமாக நடைபெற்றது.
இதற்கிடையே திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. குளிர்ந்த காற்றும் வீசியது.
இதன் பின்னர் மதியம் 2 மணியில் இருந்தே மாநகர் பகுதிகளில் ஆங்காங்கே கன மழை பெய்ய தொடங்கியது. இந்த மழையின் காரணமாக பல்லடம் ரோடு, தாராபுரம் ரோடு, மங்கலம் ரோடு உள்ளிட்ட முக்கியமான சாலைகளில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகனங்கள் தத்தளித்த படி சென்றன. இருப்பினும் நேற்று விடுமுறை தினம் என்பதால் வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடி சென்றனர். இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
Next Story