என் மலர்

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ஏர்வாடி அருகே கார் மோதி தொழிலாளி பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஏர்வாடி அருகே கார் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஏர்வாடி:

    ஏர்வாடி அருகே உள்ள தெற்கு மாவடியை சேர்ந்தவர் சமுத்திர பாண்டி (வயது 60). தொழிலாளியான இவர் நேற்று மதியம் மாவடியில் இருந்து திருக்குறுங்குடி நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். 

    மலையடிபுதூர் அருகே சென்ற போது பின்னால் வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த சமுத்திர பாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருக்குறுங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமுத்திரபாண்டிக்கு பத்ரகாளி என்ற மனைவியும், 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.
    Next Story
    ×