என் மலர்
செய்திகள்

தற்கொலை
விருதுநகர் அருகே மாணவர் தற்கொலை
விருதுநகர் அருகே மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் அருகே உள்ள முதலிப்பட்டியை சேர்ந்த பாண்டீஸ்வரன் என்ற சரவணன் (வயது20). இவர் சிவகாசியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பட்டப்படித்து வந்தார். இந்தநிலையில் இவர் தனது வீட்டில் உள்ள மாடிக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது அவர் தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை எனவும், தானாகவே எடுத்த என கடிதம் எழுதி வைத்துள்ளார். இதுகுறித்து சரவணனின் தந்தை கருப்பசாமி (47) அளித்த புகாரின்பேரில் வச்சகாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story