என் மலர்

    செய்திகள்

    தமிழக அரசு
    X
    தமிழக அரசு

    கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர்களுக்கு பதவி உயர்வு- தமிழக அரசு உத்தரவு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தமிழகத்தில் கூட்டுறவு துணை பதிவாளர்கள் சிலர் இணை பதிவாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டு, இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
    சென்னை:

    கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர்கள் சிலருக்கு இணை பதிவாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பதவி உயர்வு மற்றும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளவர்களிடம் இருந்து மாற்று பணியிட கோரிக்கை மற்றும் விடுப்பு விண்ணப்பம் ஏற்கப்படமாட்டாது.

    கடலூர் மண்டல துணைப் பதிவாளர் ஜி.நடராஜன், நாகை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளராக பதவி உயர்வுடன் இடமாற்றம் செய்யப்படுகிறார்.

    அதுபோல, சேலம் துணை பதிவாளர் ஜி.வாஞ்சிநாதன் - நீலகிரி மண்டல இணைப்பதிவாளர்; சி.எல்.சிவகாமி (விடுப்பு) - தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர்;

    ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முதன்மை வருவாய் அலுவலர் ஆர்.சுபாஷினி - நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநராக பதவி உயர்வோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும், நாகை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் பி.நடுக்காட்டுராஜா, ராமநாதபுரம் மண்டல இணைப் பதிவாளராகவும்; நெல்லை மண்டல இணைப்பதிவாளர் டி.என்.பிரியதர்ஷினி, மதுரை மாவட்ட பாண்டியன் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மேலாண்மை இயக்குநராக இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×