என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
நச்சலூர் அருகே மது விற்ற 2 பேர் கைது
நச்சலூர் அருகே மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 5 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நச்சலூர்:
நச்சலூர் பகுதியில் சிலர் மது விற்பனை செய்வதாக குளித்தலை போலீஸ் நிலையத்திற்கு தகவல் வந்தது. அதன்பேரில், போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, இனுங்கூர் பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில், திருச்சி மாவட்டம் சிறுகமணியை சேர்ந்த சிவா என்கிற சிவக்குமார் (வயது 52) என்பவர் மது விற்றதாக அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
வேலாயுதம்பாளையம் போலீசார், அதியமான்கோட்டை அருகே உள்ள டாஸ்மாக் கடை பின்புறம் மது விற்றதாக கிழக்கு தவுட்டுப்பாளையத்தை சேர்ந்த ராஜசேகர் (28) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்து 5 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story