என் மலர்

  செய்திகள்

  தஞ்சையில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்த போது எடுத்த படம்.
  X
  தஞ்சையில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்த போது எடுத்த படம்.

  தஞ்சையில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தஞ்சையில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பேரணியை மருத்துவக்கல்லூரி முதல்வர் தொடங்கி வைத்தார்.
  தஞ்சாவூர்:

  தஞ்சையில் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், இதயத்தை காப்பது குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி தஞ்சையில் நேற்று நடைபெற்றது. பன்னாட்டு ரோட்டரி சங்கங்கள் இணைந்து நடத்திய இந்த பேரணிக்கு ரோட்டரி மாவட்ட கவர்னர் பாலாஜி பாபு தலைமை தாங்கினார்.

  சைக்கிள் பேரணியை தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருதுதுரை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

  கொரோனா வைரஸ் மனித குலத்திற்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இதனை பரவாமல் தடுக்க முடியும். இந்த வைரஸ் முதியவர்களையும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை அதிகமாக தாக்குகிறது. இந்த வைரஸ் நோயில் இருந்து காத்து கொள்ள கட்டாயம் முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

  அனைவரும் தினந்தோறும் 30 நிமிடம் கட்டாயம் சைக்கிள் ஓட்ட வேண்டும். இவ்வாறு சைக்கிள் ஓட்டுவதால் ரத்த அழுத்தம், இதயம் பாதிக்காமல் காத்துகொள்ள முடியும். உடல் எடையும் குறையும். சைக்கிள் ஒட்டும்போது வெளியேறும் வியர்வையால் கெட்ட கொழுப்புகள் நீங்கும். மேலும் மாசற்ற சூழலை உருவாக்க சைக்கிளை பயன்படுத்த வேண்டும்” என்றார்.

  இந்த நிகழ்ச்சியில் பல்வேறு ரோட்டரி சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

  இந்த சைக்கிள் பேரணி தஞ்சை கொண்டிராஜபாளையம் பீரங்கி மேட்டில் இருந்து புறப்பட்டு கீழவாசல் மார்க்கெட் சாலை, அண்ணாசாலை, ஜங்ஷன், மேரீஸ் கார்னர், ராமநாதன் மருத்துவமனை, புதிய பஸ் நிலையம் வழியாக 7 கி.மீ. தூரம் சென்று பாரத் கல்லூரியை சென்றடைந்தது.

  பேரணியில் ரோட்டரி சங்க நிர்வாகிகள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற அனைவரும் முககவசம் அணிந்து கலந்து கொண்டனர்.
  Next Story
  ×