என் மலர்

  செய்திகள்

  கோப்பு படம்.
  X
  கோப்பு படம்.

  திருமங்கலம் அருகே கொத்தனார் மர்ம மரணம்- உறவினர்கள் போராட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருமங்கலம் அருகே கொத்தனார் மர்ம சாவு குறித்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  திருமங்கலம்:

  திருமங்கலம் அருகே உள்ள அரசபட்டியை சேர்ந்தவர் மணி (வயது 30). இவர் கொத்தனார் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் நேசனேரியை சேர்ந்த பேச்சியம்மாள் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அத்துடன் நேசனேரியில் உள்ள தனது மாமனார் வீட்டில் தங்கினார். இவர் கொத்தனார் வேலைக்காக அடிக்கடி வெளியூர் சென்று வந்துள்ளார். இதில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

  இதுகுறித்து பேச்சியம்மாள் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைதொடர்ந்து அவர்கள் மணியை கண்டித்துள்ளனர். இதில் விரக்தி அடைந்த மணி வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  இதுபற்றி தகவல் அறிந்த அரசபட்டியில் உள்ள மணி உறவினர்கள் நேசனேரி கிராமத்திற்கு வந்து மணி சாவில் மர்மம் உள்ளதாக கூறி அவரின் உடலை எடுக்க விடாமல் தகராறில் ஈடுபட்டனர். மேலும் திருமங்கலம் தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மணியின் உறவினர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். மணியை அடித்துக்கொன்று தூக்கில் தொங்க விட்டு விட்டனர்.

  இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே உடலை எடுக்க அனுமதிப்போம் என தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதைதொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் போலீசார் மணியின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கொத்தனார் மணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டாரா என விசாரித்து வருகின்றனர்.
  Next Story
  ×