என் மலர்

  செய்திகள்

  ரேஷன் அரிசி பறிமுதல்
  X
  ரேஷன் அரிசி பறிமுதல்

  எட்டயபுரம் அருகே ரேஷன் அரிசி பறிமுதல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  எட்டயபுரம் அருகே உரிய ஆவணம் இல்லாமல் எடுத்து சென்ற 50 ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
  எட்டயபுரம்:

  எட்டயபுரம் அருகே உள்ள கீழஈரால் பஸ்நிறுத்தம் அருகே எட்டயபுரம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கோவில்பட்டியில் இருந்து தூத்துக்குடிக்கு ஒரு மினி லாரி வந்து கொண்டிருந்தது.அந்த மினி லாரியை நிறுத்தி போலீசார் சோதனையிட்டபோது, அதில் உரிய ஆவணம் இல்லாமல் 50 ரேஷன் அரிசி மூட்டை எடுத்து சென்றது தெரியவந்தது.

  இதனையடுத்து மினி லாரியுடன் ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக டிரைவர் கோவில்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்த ராமு மகன் மாரிமுத்து(வயது 48) என்பவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×