என் மலர்

  செய்திகள்

  நகை பறிப்பு
  X
  நகை பறிப்பு

  திருவையாறு அருகே மூதாட்டியிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவையாறு அருகே மூதாட்டியிடம் 4 பவுன் சங்கிலி பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  திருவையாறு:

  திருவையாறு 15 மண்டபத்தெருவை சேர்ந்த வெங்கட்ரமணி. இவருடைய மனைவி லெட்சுமி (வயது82). இவர் நேற்று திருவையாறு கடைவீதியில் உள்ள ஒரு வங்கிக்கு சென்று பணம் எடுத்துக்கொண்டு மீண்டும் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். 15 மண்டபத் தெரு மெயின்ரோட்டிலிருந்து தெருவுக்குள் அவர் சென்ற போது பின்புறம் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் லெட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த லெட்சுமி திருவையாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
  Next Story
  ×