என் மலர்

  செய்திகள்

  கொரோனா வைரஸ்
  X
  கொரோனா வைரஸ்

  கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஓய்வு பெற்ற பெண் போலீஸ் அதிகாரி உயிரிழப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஓய்வு பெற்ற பெண் போலீஸ் அதிகாரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவர் உயிரிழந்தார்.
  சென்னை:

  சென்னை போரூர் மதனந்தபுரம் பகுதியை சேர்ந்த 64 வயதான ஓய்வுபெற்ற பெண் போலீஸ் அதிகாரி (ஏ.டி.சி) சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார்.

  இதையடுத்து கடந்த மாதம் 22-ந் தேதி ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று அவர் உயிரிழந்தார். நேற்று அவருக்கு மீண்டும் பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரிவந்துள்ளது. இதையடுத்து அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, உடல் அடக்கம் செய்யப்பட்டது.
  Next Story
  ×